இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Saturday, October 20, 2012

அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட TET answer key TRB ஆல் வெளியிடப்பட்டுள்ளது அது உங்களுக்காக single pdf format ல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது


SMS " ON tntet2012 " to 9870807070 புதிதாக உங்களுக்கான சேவை...

இந்த வலைபூ வேலைவாய்ப்பிற்கான ஒரு ஒருங்கிணைப்பு தளமாக செயல்பட்டுவருவதை நீங்கள் அறிவீர்கள்...

உங்கள் அலைபேசியில் இந்த தளத்தின் புது புது வெளியீடுகளை உடனுக்குடன் குறுந்தகவலாக பெற மற்றும் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற தற்போது தொடங்கப்பட்டுள்ளதே GOOGLE SMS சேவை

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்


உங்கள் மொபைலில் இருந்து " ON tntet2012 "  என்று 9870807070 என்ற எண்ணிற்கு ஒரு sms அனுப்புங்கள் பிறகு பெறுங்கள் உடனுக்குடனான குறுந்தகவல் சேவையை அதுவும் தினமும் இலவசமாக...

 தினமும் புதுப்புது செய்திகளும் உங்களுக்கு தேவையான தகவல்களும் இதில் இடம் பெறுவதாக நீங்கள் நினைப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

மிகக் குறைந்த காலத்திலேயே 3 மாதத்திலேயே... 60 ஆயிரம் பார்வையாளர்களை வெற்றிகரமாக இந்த தளம் பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

புதுமை - எளிமை - தனித்துவம் என்பதே இந்த தளத்தின் குறிக்கோள்

இனி வரும் காலங்களில் நீங்கள் பெரிதும் கவலைப்படும் இந்த தளத்தின் மின்னியல் புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யும் சேவை தொடங்கப்படும்


Wednesday, October 17, 2012

IBPS - வங்கி பணிக்கான பொது நுழைவுத் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 5


வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டம் - 9 ஆம் வகுப்பு தவறியவர்களுக்கும் வழங்க அரசு அனுமதி படிவம் பதிவிறக்கம் இங்கே

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இன்னும் வேலை கிடைக்காதவர்களுக்கு மாதம் அவர்களின் கல்வித் தகுதிக் கென குறிப்பிட்ட தொகையை உதவித் தொகையாக வழங்கி வருகிறது தமிழக அரசு.


தங்களின் செல்போனை ரீச்சார்ஐ் செய்யவாவது இந்த தொகை போதும் என்றுதான் பல மாணவர்களும் பட்டதாரிகளும் இந்த திட்டத்தில் தங்களை பதிந்து கொள்கின்றனர்.

பத்தாம் வகுப்பு பாஸ் தான் இதற்கான அடிப்படை கல்வித்தகுதியாக இருந்தது... இன்று செப்டம்பர் 17 - 2012 அன்று இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற 9 ஆம் வகுப்பு தேர்ச்சியே அடிப்படை தகுதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..

முழுமையான விவரத்தினையும்... அதற்கான படிவத்தினையும் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..


http://employmentexchange.tn.gov.in/Empower/pdf/Forms/FORM_4.pdf 

ரயில்வேயில் பல்வேறு மருத்துவ பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 12



 இந்திய ரயில்வேயில் மருத்துவத்துறையில்  பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..


விண்ணப்பங்களை தாங்கள் எழுத விரும்பும் பணிக்கான தேர்வு கட்டணங்கள் செலுத்தப்பட்ட அஞ்சலக பற்று சீட்டு அல்லது DD உடன் வழக்கமான முறையில் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்...

முழு தகவலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

http://www.rrbthiruvananthapuram.net/(S(qtdhl32pox1ysxa3i5pzzjnz))/Admin/NotificationFiles/CEN05_2012-PARAMEDICALCATEGORIES.pdf

Tuesday, October 16, 2012

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 18ஆயிரத்து 932 பணியிடங்களும் நிரப்பப்படுவதில் சிக்கல் - புதிய வியூகத்தினை கையாள போகும் TRB...


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர் என்று ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

 

இதில் தற்போது நடந்து முடிந்த அக்டோபர் TET தேர்வினில் முதல் தாளில் வினாக்கள் மிகவும் எளிமையாக அமைந்ததால் குறைந்தது 50,000 பேர் வரை தேர்ச்சி அடைவார்கள் என்று தெரிகிறது.

 

ஆனால் இந்த தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி நியமனம் Seniority அடிப்படையில் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண்ணும் கருத்தில் கொள்ளப்படும் என்ற இருநிலையான அறிவிப்புகள் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது.

 

இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்தில் Seniority பிரட்சனை என்றால்... பட்டதாரி ஆசிரியர் தேர்வில் சமூக அறிவியல் பாடம் தவிர்த்த மற்ற பாடங்களில் வினவப்பட்ட வினாக்கள் மிகவும் கடினமாகவே இருந்தன...

 

இது சென்ற சூலை மாதம் நடந்த TET தேர்வினை விட கடினமானது என்றே தேர்வர்களால் பாவிக்கப்பட்டது .

 

இந்த சூழலில் தேவையான 18,932 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் அளவு ஆசிரியர்கள் தேர்வாகாத சூழலில் 5 சதவிகித மதிப்பெண்ணை குறைத்து .. அதாவது தேர்ச்சி மதிப்பெண்ணை 82.5 சதவிகிதமாக குறைத்து மேற்கொள்ள TRB முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 

 

சென்ற தேர்விலேயே 750 பேர்தான் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தேர்வானார்கள்... அதை விட கடினமான வினா வினவப்பட்ட இந்த தேர்வில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைபவர்கள் எண்ணிக்கை 2000 ஐ தாண்டாது என்றுதான் தோன்றுகிறது.

 

 

மீண்டும் மறுத் தேர்வு நடத்த TRB ஆல் முடியாது என்பதாலும் அறிவிக்கப்பட்ட பணி நியமனத்தினை வழங்க ஆவண உடனடியாக செய்ய வேண்டும் என்பதாலும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வாணையம் சில நெகிழ்வு சுளிவுகளை மேற்கொண்டாகும் என்பது இதன் மூலம் உறுதி...

 

 

எது எப்படியே... இந்த முறை அறிவிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பியே ஆக வேண்டும் என்பது ஆசிரியர் தேர்வாணையத்தின் விதி... 

 

 

  

TRB ஆல் வெளியிடப்பட்டுள்ள அக்டோபர் TNTET 2012 விடைகள் இங்கே...