இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Friday, August 31, 2012

வேலைவாய்ப்பு பதிவு தளம் மாற்றம்..http://employmentexchange.tn.gov.in/Empower/

ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான B.Ed படிப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று சனிக்கிழமை 01-09-2012 அன்று சென்னையில் வழங்கப்பட்டது

இதனை தொடர்ந்து அந்தந்த கல்வியியல் கல்லூரிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை அளிக்க கல்லூரி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளன...


ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் நாளே பதிவு மூப்பு நாளாக கொள்ளப்படும் என்பதால் ( சனி , ஞாயிறு என விடுமுறை நாட்கள் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை) இன்றே மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கி http://employmentexchange.tn.gov.in/Empower/ எனும் வேலைவாய்ப்பு இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளவும் என தினத்தந்தி செய்திதாளில் செய்தி வெளியாகி இருந்தது....

இதனை தொடர்ந்து அந்தந்த கல்வி நிலையங்களில் மதிப்பெண் சான்றிதழை பெற்ற B.Ed பட்டதாரிகள் ஆன்லைனில் தங்களின் கல்வி தரத்தினை இணைக்க முயன்றதால் செப்டம்பர் 01 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணி முதல்  தற்போது  வரை வேலைவாய்ப்பு பதிவு தளம் முடங்கி உள்ளது

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பினருக்கு அளிப்பது போல் ஒரு வார காலம் கால நீடிப்பு செய்து ஒரே நாளில் Seniority வரும்படி செய்ய வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது


கீழ்காணும் தளம் இயங்குகிறது.

http://employmentexchange.tn.gov.in/Empower/ 

Wednesday, August 29, 2012

பாரதியார் பல்கலைக்கழகம் SET ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 7 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது...

கடந்த வாரம் 4 நாட்களாக ஆன்லைனில் பதிவு செய்ய முதுகலை பட்டதாரிகள் தடுமாறிய நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 30 என்பதிலிருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி என கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது...

மேலும் அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் செப்டம்பர் 14

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்...