ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர் என்று ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதில் தற்போது நடந்து முடிந்த அக்டோபர் TET தேர்வினில் முதல் தாளில் வினாக்கள் மிகவும் எளிமையாக அமைந்ததால் குறைந்தது 50,000 பேர் வரை தேர்ச்சி அடைவார்கள் என்று தெரிகிறது.
ஆனால் இந்த தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி நியமனம் Seniority அடிப்படையில் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண்ணும் கருத்தில் கொள்ளப்படும் என்ற இருநிலையான அறிவிப்புகள் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது.
இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்தில் Seniority பிரட்சனை என்றால்... பட்டதாரி ஆசிரியர் தேர்வில் சமூக அறிவியல் பாடம் தவிர்த்த மற்ற பாடங்களில் வினவப்பட்ட வினாக்கள் மிகவும் கடினமாகவே இருந்தன...
இது சென்ற சூலை மாதம் நடந்த TET தேர்வினை விட கடினமானது என்றே தேர்வர்களால் பாவிக்கப்பட்டது .
இந்த சூழலில் தேவையான 18,932 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் அளவு ஆசிரியர்கள் தேர்வாகாத சூழலில் 5 சதவிகித மதிப்பெண்ணை குறைத்து .. அதாவது தேர்ச்சி மதிப்பெண்ணை 82.5 சதவிகிதமாக குறைத்து மேற்கொள்ள TRB முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சென்ற தேர்விலேயே 750 பேர்தான் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தேர்வானார்கள்... அதை விட கடினமான வினா வினவப்பட்ட இந்த தேர்வில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைபவர்கள் எண்ணிக்கை 2000 ஐ தாண்டாது என்றுதான் தோன்றுகிறது.
மீண்டும் மறுத் தேர்வு நடத்த TRB ஆல் முடியாது என்பதாலும் அறிவிக்கப்பட்ட பணி நியமனத்தினை வழங்க ஆவண உடனடியாக செய்ய வேண்டும் என்பதாலும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வாணையம் சில நெகிழ்வு சுளிவுகளை மேற்கொண்டாகும் என்பது இதன் மூலம் உறுதி...
எது எப்படியே... இந்த முறை அறிவிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பியே ஆக வேண்டும் என்பது ஆசிரியர் தேர்வாணையத்தின் விதி...