இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Wednesday, October 10, 2012

TET - Hallticket கிடைக்க பெறாதவர்கள் செய்ய வேண்டியது என்ன?

வரும் அக்டோபர் 14 ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

அதற்கான நுழைவு சீட்டு பழைய விண்ணப்பதார்களுக்கு வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய விண்ணப்பதார்களும்... தங்களுக்கு நுழைவுச்சீட்டு கிடைக்க பெறாத பழைய விண்ணப்பதார்களும் செய்ய வேண்டியது இதுதான்

கீழே உங்களின் நிலைக்கேற்ப லிங்குகளை கிளிக் செய்யுங்கள்..

 பழைய விண்ணப்பதார்கள் இங்கே சொடுக்கவும்...

புதிய விண்ணப்பதாரர்கள் இங்கே சொடுக்கவும்

பின்னர் தங்களின் பழைய தேர்வு எண்ணையோ... புதிதாக விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணையோ கொண்டு தங்களின் புதிய தேர்வு எண் மற்றும் தேர்விற்கான இடம் நேரம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய ctrl+P அழுத்தி A4 தாளில் print out எடுத்துக் கொள்ளவும்..

பிறகு வலது மூலையில் தங்களின் ஒரு புகைப்படத்தினை ஒட்டி அதில் gazetted officer ஒருவரிடம் புகைப்படத்தினை ஒட்டியவாறு கையொப்பம் பெற்றுக்கொள்ளவும்..

தேர்வு நாளன்று கையோடு இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினையும் இந்த Hallticket ஐயும் உடன் தங்களின் அடையான அட்டை ஒன்றிணையும் எடுத்துச் செல்லவும்... அவ்வளவுதான்..


அடையாள அட்டைக்காக குடும்ப அட்டை யை தவிர்த்து தனிநபர் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லவும்...

நன்றாக தேர்வு எழுத வாழ்த்துக்கள்..

இப்படிக்கு உங்களில் ஒருவனாக Jaganathan. R