இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Friday, October 5, 2012

பத்தாம் வகுப்பு தவறியவர்களுக்கு தட்கல் முறையில் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 8


அகவிலைப்படி 7 சதவிகிதம் உயர்வு - தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி




கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவிகிதம் உயர்த்தி வழங்க வெளியான தகவலை தொடர்ந்து மாநில அரசும் தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அறிவித்துக்ளது.

இதன்படி, 



தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  ‌பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ம் (1.7.2012)தேதி முதல் கணக்கீட்டு ரொக்கமாக வழங்கப்படும். 

இந்த அகவிலைப்படி உயர்வினால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பன்பெறுவர்.

 இதன் மூலம் அரசுக்கு ரூ. 1,443. 52 கோடி செலவாகும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...