இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Monday, October 29, 2012

Group 2 - இன்றைய விசாரணை விவரம்.

இன்று ( 29.10.2012 ) மதியம் விசாரணைக்கு வழக்கு வந்த போது நிர்மல் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிம் மேலும் 2 கேள்விகளுக்கான விடை தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதற்கு தேர்வாணையம் பதிலளிக்க வசதியாக வரும் புதன்கிழமை ( 31.10.2012 ) அன்று வழக்கை நீதிபதி தள்ளி வைத்துள்ளார். சில கேள்விகள் விபரம்:

1) வோல்ட் மீட்டரின் மிந்தடையின் அளவு அதிகம் ஏன் எனில் ...........
2) 2009-2010 பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது மாநிலமாக உள்ளது? 
3) கீழ்கண்டவற்றில் எது வெளிப்பாட்டுக் கருவி இல்லை?
4) எய்திய - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. Etc

TNPSC'ன் வாதம் எடுபட வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் சாதகமாய் தீர்ப்பு வெகு விரைவில் வரலாம் என அனுபவ சாலிகளின் கணிப்பு கூறுகிறது.

COUNSELLING முடித்தவர்கள் மற்றும் NON-INTERVIEW POSTக்காக காத்திருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். கட்டாயம் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாகவே அமையும்.

"இன்னும் கொஞ்சம் தாமதம் தான்" என நினைத்துக் கொள்ளுங்களேன்.

Sunday, October 28, 2012

சென்ற TNTET தேர்வில் தேர்ச்சி அடைந்த D.T.Ed ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியது


டி.இ.டி., முதல் தாளில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். 

 

எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும். 

 

சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்' நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும் என்று டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

 

சென்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்த இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி நியமனம் உறுதி ஆகிவிட்டது.

 

இந்த அக்டோபர் தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மீதமுள்ள 3500 பணி இடங்களை நிரப்புவதில் போட்டா போட்டி ஏற்படும் என்பது தெரிய வருகிறது.

 

மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் அக்டோபர் 14 அன்று நடந்த ஆசிரியர் மறு தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்க படுகிறது.

 

 

Saturday, October 20, 2012

அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட TET answer key TRB ஆல் வெளியிடப்பட்டுள்ளது அது உங்களுக்காக single pdf format ல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது


SMS " ON tntet2012 " to 9870807070 புதிதாக உங்களுக்கான சேவை...

இந்த வலைபூ வேலைவாய்ப்பிற்கான ஒரு ஒருங்கிணைப்பு தளமாக செயல்பட்டுவருவதை நீங்கள் அறிவீர்கள்...

உங்கள் அலைபேசியில் இந்த தளத்தின் புது புது வெளியீடுகளை உடனுக்குடன் குறுந்தகவலாக பெற மற்றும் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற தற்போது தொடங்கப்பட்டுள்ளதே GOOGLE SMS சேவை

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்


உங்கள் மொபைலில் இருந்து " ON tntet2012 "  என்று 9870807070 என்ற எண்ணிற்கு ஒரு sms அனுப்புங்கள் பிறகு பெறுங்கள் உடனுக்குடனான குறுந்தகவல் சேவையை அதுவும் தினமும் இலவசமாக...

 தினமும் புதுப்புது செய்திகளும் உங்களுக்கு தேவையான தகவல்களும் இதில் இடம் பெறுவதாக நீங்கள் நினைப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

மிகக் குறைந்த காலத்திலேயே 3 மாதத்திலேயே... 60 ஆயிரம் பார்வையாளர்களை வெற்றிகரமாக இந்த தளம் பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

புதுமை - எளிமை - தனித்துவம் என்பதே இந்த தளத்தின் குறிக்கோள்

இனி வரும் காலங்களில் நீங்கள் பெரிதும் கவலைப்படும் இந்த தளத்தின் மின்னியல் புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யும் சேவை தொடங்கப்படும்